பொறியியல் கலந்தாய்வு ரேங்க் லிஸ்ட் வெளியீடு
TNEA Rank List 2019 பொறியியல் படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 27ஆயிரத்து 245 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் அடிப்படையிலான ரேங்க் லிஸ்ட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 2-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெற்றது.
இதில், பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 32,412 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண், அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 45 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. இதில் ஒரு லட்சத்து 4,000 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.
முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்திலும், 2பேர் CBSE பாடத்திட்டதிலும் ,1 மாணவர் பிற பாடத்திட்டத்திலும் படித்தவர்.
முதல் இடத்தை அரவிந்த் என்கிற மாணவரும், 2ம் இடத்தை ஹரிஷ் பிரபு என்ற மாணவரும், 3ம் இடத்தை பிரதிபா செந்தில் என்கிற மாணவியும் பெற்றுள்ளனர்.
ரேங்க் லிஸ்ட் தெரிந்து கொள்வது எப்படி?
தொழில்நுட்ப கல்வி இயக்குநரத்தின் இணையதளமான tndte.gov.in மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான இணையதளமான tneaonline.inஆகியவற்றில் பதிவு எண்கள் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேங்க் லிஸ்டை பெறலாம்.
பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதியும் தொடங்க உள்ளன.
பொறியியல் படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 27ஆயிரத்து 245 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதனால், 69ஆயிரத்து 790 இடங்கள் காலியாக உள்ளது. விண்ணப்பித்தவர்களில் 1லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதியுடைவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 479 கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை
இந்த ஆண்டு 216 மாற்றுத்திறனாளி மாணவர்களும் , 1537 முன்னாள் இராணுவத்தினர் பிள்ளைகள், 4616 விளையாட்டு பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்..